பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவித்து தன் பங்கிற்கு பாசமழை பொழிந்துள்ளது அசாம் அரசு.
காலம் நவீனம் பெறப்பெற, பழமைகள் மறைந்து கொண்டே செல்கின்றன. குறிப்பாக, கூட்டுக்குடும்பம் என்ற நடைமுறை மறைந்து குடும்பத்திற்கு நால்வர் போதும் என்ற மனநிலை பெரும்பாலும் காணப்படுகிறது.
அரும்பாடு பட்டு வளர்த்த தாய் தந்தையை, பிள்ளைகள் கவனிக்காமல் செல்லும் அவலம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு முடிவு கட்ட நினைத்த அசாம் அரசு, புதிய பாணியைக் கையில் எடுத்துள்ளது.
மாநிலம் முழுவதும் பெற்றோரிடம் பாசம் காட்டிய பிள்ளைகள் என 199 பேரை தேர்வு செய்து ஒரு லட்சம் ரூபாய் பரிசை அறிவித்துள்ளது.
குடும்ப மதிப்புகள் மற்றும் பிணைப்புகளை வலுப்படுத்த நினைத்த அசாம் அரசு மீது நெட்டிசன்கள் பாசத்தை அள்ளி தெளிக்கின்றனர்.