நடிகர் ரஜினி நடித்த கூலி படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் இந்தப் படம் முதல் நாளில் மட்டும் 151 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்மூலம், தமிழில் அதிகமாக வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையைக் கூலி படைத்துள்ளது. இதற்கு முன்பாக விஜய்யின் லியோ திரைப்படம் 148 கோடி ரூபாயை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.