79-வது சுதந்திர தினத்தையொட்டி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிதின் கட்கரி உள்ளிட்டோர், தங்களின் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றினர்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், செங்கோட்டையில் பிரதமர் ஆற்றிய உரை மிகவும் சக்தி வாய்ந்த உரை என்று தெரிவித்தார்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.