சிரியாவில் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிரியாவின் அல்-சுகைலாபியா மாவட்டத்தில் உள்ள அலவைட் மலையில் காட்டுத்தீயானது பரவி வருகிறது. இதனால் அபு க்ளீஃபோன் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் காட்டுத் தீ பரவியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து உள்ளூர் இளைஞர்களும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.