உலகமே உற்றுநோக்கிய டிரம்ப் மற்றும் புதின் இடையேயான பேச்சுவார்த்தை சுமார் 3 மணிநேரத்திற்கு பிறகு நிறைவு பெற்றது.
3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையானது, அமெரிக்காவின் ஆங்கரேஜ் பகுதியில் உள்ள ராணுவ படை தளத்தில் நடைபெற்றது. இதற்காக அலாஸ்கா வருகை
ரஷ்ய அதிபர் புதினை, கைகுலுங்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றார்.
இதனைதொடர்ந்து ஒரே காரில் பயணம் செய்து இருவரும் ஆங்கரேஜ் பகுதியில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், டிரம்ப் – புதின் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக மாஸ்கோவில் மீண்டும் பேச்சுவர்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டிரம்ப் மற்றும் புதின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய புதின், எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்றும், நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம் என்று கூறினார்.
இதனையடுத்து பேசிய டிரம்ப், உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும், ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.