மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நாகலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்துவந்த இல.கணேசன், ஆகஸ்ட் 8-ம் தேதி தனது வீட்டில் வழுக்கி விழுந்ததில் காயமடைந்தார். இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை தி.நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்த அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.