மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி செலுத்தினார்,
மறைந்த, நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசனின் உடல், சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இல கணேசனின் மறைவையொட்டி தமிழக பாஜக சார்பில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.