தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான சந்திப்பு நடைபெற்றது.
புதுச்சேரி பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தால் இருவருக்கும் மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.
அன்று தொடங்கிய மோதல் போக்கு இருவரும் பரஸ்பரமாக குற்றசாட்டுகளையும் நடடிக்கைகளையும் அடுத்தடுத்து முன்வைத்ததால் பாமகவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், ராமதாஸின் மனைவி சரஸ்வதி அம்மையார் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி, அன்புமணி மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் தைலாபுரம் இல்லத்திற்கு வருகை தந்தனர்.