சீனாவில் தொடங்கி உள்ள ரோபோ ஒலிம்பிக்ஸ் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பெய்ஜிங்கில் 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் தடகளம், கால்பந்து, குத்துச் சண்டை போன்ற விளையாட்டுகளில் பங்கேற்ற மனித வடிவ ரோபோக்கள் அச்சு அசலாக மனிதர்களைப் போலவே விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.