திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் அதிமுக பேனரைக் கிழித்தும், வணிகர்களிடம் பணம் கேட்டும் தகராறில் ஈடுபட்ட திமுக துண்டு அணிந்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் டீக்கடையில் இருந்த பிளாஸ்டிக் குடத்தை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையம் பகுதியில் நீண்ட நேரம் போதையில் தகராறு செய்தார். இதனால், பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கடும் சிரமமடைந்தனர்.