அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள தண்ட காரண்யம் படத்திற்குத் தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.
2019-ம் ஆண்டு அதியன் ஆதிரை இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவான இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஆதியன் ஆதிரை இயக்கும் தண்டகாரண்யம் என்ற படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அட்டகத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 23ம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.