தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்து கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடிய பக்தர்கள், ராமநாத சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளைத் தரிசித்துச் சென்றனர்.