கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா களைகட்டியது.
கடந்த மாதம் இறுதியில் கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் 305-ம் ஆண்டு ஆடிப்பூர திருவிழாவில், நாள்தோறும் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சிகர நிகழ்ச்சியாகத் தீமிதி விழாவில் சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.