ரஷ்யாவின் ஓரன்பர்க் நகரில் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்தோடியது.
கஜகஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய நகரான ஓரன்பர்க் நகரில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.