உள்நாட்டுத் தயாரிப்பால் நாளுக்கு நாள் வலுப்பட்டு வரும் இந்தியப் பாதுகாப்புத்துறை, தற்போது கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோவை களத்தில் இறக்கியுள்ளது.
MULE என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு ரோபோ, வெயில், மழை என எந்த காலக்கட்டத்திலும் சிறப்புற தன் பணியை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாய் வடிவத்தில் உள்ள இந்த ரோபோ, காடு, மலை என எந்தவொரு கரடுமுரடான பாதையிலும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகக் கண்ணிவெடி தாக்குதல்களுக்கு ராணுவ வீரர்கள் ஆளாகாமல் இருக்க MULE ரக ரோபோ பேருதவியாக இருக்கும். எல்லைப் பகுதியில் ஊடுருவ நினைக்கும் பயங்கரவாதிகளுக்கும் MULE ரக ரோபோ சிம்மசொப்பனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.