இன்றைய காலகட்டத்தில் விதவிதமான சொகுசு கார்கள் மக்கள் மனதைக் கொள்ளையடித்திருக்கலாம்… ஆனால் 90 காலகட்டத்தைப் பொறுத்தவரைச்சொகுசு கார் என்றாலே… முதலில் நினைவுக்கு வருவது பிஎம்டபிள்யூ தான்.
அத்தகைய வகையில் இந்தியர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்தது. அந்த பிஎம்டபிள்யூ கார்களின் விலை தான், தற்போது உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1-ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அடிப்படையில் ஜெர்மன் கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் தனி மவுசு உள்ள நிலையில், இந்த விலை உயர்வு அறிவிப்பானது கார் பிரியர்களை ஏமாற்றம் அடையச்செய்துள்ளது.
அதிகபட்சம் 3 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முடிவு பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு சாதகமாக அமையுமா? பாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.