வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா... ! : 'GAME CHANGER' ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?
Sep 4, 2026, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

Murugesan M by Murugesan M
Aug 18, 2025, 03:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்ய தயாரிப்பான R-37 VYMPEL வான்வழி ஏவுகணையை வாங்குவது குறித்து இந்திய விமானப்படை பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீன படைகளை சில நொடிகளில் தரைமட்டமாக்க வல்லது எனக் கூறப்படும் இந்த ஏவுகணையின் சிறப்பம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்துள்ள இந்தியா, பல காலமாக இருமுனை போர் சவாலை எதிர்கொண்டு வருகிறது. இந்த இரு நாடுகளும் ஒன்றிணைந்து எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதால், இந்தியாவின் பாதுகாப்பு பெரும் சவால் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.

இரு நாடுகளுடன் இந்தியாவிற்கு உள்ள எல்லை பிரச்னையே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த இருமுனை போர் சவாலை எதிர்கொள்ள இந்தியா பல வழிகளில் தயாராக இருப்பது அவசியம் என்பதால், நவீன போர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், ராணுவ படைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே சுதர்சன சக்ரா திட்டம் என்ற பெயரில் புதிய வான் பாதுகாப்பு அமைப்பை, வரும் 2035-ம் ஆண்டிற்குள் உருவாக்க உள்ளதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த திட்டம் இந்தியாவின் பாதுகாப்பை அனைத்து வித அச்சுறுத்தல்களில் இருந்தும் பாதுகாக்கும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய விமானப்படை ரஷ்ய தயாரிப்பான R-37 VYMPEL என்ற வான்வழி ஏவுகணையை வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை மேம்பட்ட போர் விமானங்களை எதிர்கொள்ளும் வகையில், இந்திய விமானப்படையின் நீண்டதூர வான்வழி போர் நடவடிக்கைக்கு வலுசேர்க்கும் என நம்பப்படுகிறது. R-37 VYMPEL வான்வழி ஏவுகணை 200 முதல் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட நொடிப் பொழுதில் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.

காட்சி வரம்பிற்கு அப்பால் சென்று தாக்கும் திறன் கொண்டதால் இந்த ஏவுகணை, RVV-BD ஏவுகணை என்றும் அழைக்கப்படுகிறது. உலகின் மிக நீண்டதூர வான்வழி ஏவுகணைகளுள் ஒன்றான R-37 VYMPEL ஏவுகணை, போர் விமானங்கள், பிற வான்வழி ஏவுகணைகள், கட்டுப்பாட்டு விமானம், குண்டுவீசும் விமானம் போன்ற உயர்ரக இலக்குகளை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரேடார் வழிகாட்டுதலில் இயங்கும் இந்த ஏவுகணை, DUAL-STAGE SOLID ROCKET MOTOR-ஐ கொண்டுள்ளது. R-37 VYMPEL ஏவுகணையின் இந்த மேம்பட்ட வடிவமைப்பு, ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் பயணிக்கும் MACH-6 ஏவுகணையைக்கூட முந்திச் செல்ல வழிவகுக்கிறது.

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது இந்தியாவின் S-400 என்ற வான் பாதுகாப்பு அமைப்பு, சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே பாகிஸ்தானின் போர் விமானங்களையும், ஒரு கட்டுப்பாட்டு விமானத்தையும் தாக்கி அழித்தது. இந்நிலையில், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ வெற்றிக்குப் பின் இந்திய விமானப்படைக்கு R-37 VYMPEL வான்வழி ஏவுகணையை வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக இந்த சக்திவாய்ந்த ஏவுகணை இந்திய விமானப்படையில் உள்ள 260 சுகோய் Su-30 MKI போர் விமானங்களில் பொருத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படிப் பொருத்தப்படும் பட்சத்தில் பாகிஸ்தானின் F-16, சீனாவின் J-20 ஸ்டெல்த் போன்ற மேம்பட்ட போர் விமானங்களுக்கு எதிராக இந்தியா வலுவான தடுப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஃபேல் விமானங்களுடன், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 110 கிலோ மீட்டர் வரம்புகொண்ட ASTRA MK-1, 150 கிலோ மீட்டர் வரம்புகொண்ட FRENCH MBDA METEOR போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டுள்ள இந்திய விமானப்படையில், R-37 VYMPEL வான்வழி ஏவுகணையும் இணையும் பட்சத்தில் அது நாட்டின் வான்வழி பாதுகாப்புக்குக் கூடுதல் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

Tags: ரஷ்ய தயாரிப்பான R-37 VYMPEL வான்வழி ஏவுகணைIndiaGame ChangerIndia to put an end to aerial threats...! : R-37 VYMPEL missile to be fielded as a 'GAME CHANGER'?R-37 VYMPEL ஏவுகணை
Share
Tweet
SendShare
Previous Post

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

Next Post

நியூயார்க்கில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி!

Related News

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி கைது!

இது போருக்கான காலம் அல்ல : இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜெலென்ஸ்கி வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த விவகாரம் – வங்க தேசத்தை சேர்ந்த 23 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை!

ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஓஎஸ்-5 செயற்கைக்கோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies