கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா, பாரம்பரியம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. முன்னதாக, சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது, கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்திருந்த மாணவர்கள், பாடல் பாடியும், நடனமாடியும் அசத்தினர். மேலும், விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பல்வேறு கலாச்சார போட்டிகளில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற விழாவில், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.