இந்தியா மீதான டிரம்பின் வரிகள் முட்டாள்தனம் என அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெப்ரி சாக்ஸ் விமர்சித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதித்தார்.
இதுகுறித்து கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான ஜெப்ரி சாக்ஸ் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது, இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பது முட்டாள்தனம் எனவும் எந்த நோக்கத்திற்கும் அது உதவாது எனவும் காட்டமாக கூறினார்.
டிரம்பின் வரி முடிவுகள் அமெரிக்காவிற்கு நன்மையை விட அதிக தீங்கை விளைவிப்பதாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார். டிரம்பின் முழு வரி விதிப்பும் அரசியலமைப்பிற்கு விரோதமானது எனக் கூறிய ஜெப்ரி, பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் ரீதியாக அவரது வரி விதிப்பு கொள்கைகள் தோல்வி அடையும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மாயையில் இருக்கும் டிரம்ப், தனது கோரிக்கைகளுக்கு மற்றவர்கள் இணங்குவார்கள் எனவும் உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் முதலாளித்துவம் செய்ய முடியும் என நினைப்பதாகவும் ஜெர்பி சாக்ஸ் விமர்சித்துள்ளார்.