நெல்லையில் நடைபெற உள்ள பாஜக மண்டல மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார்.
தமிழக பாஜக சார்பில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும் என கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். அதன்படி முதற்கட்ட மாநாடு நெல்லை, வண்ணாரப்பேட்டையில் வரும் 22ம் தேதி நடக்க உள்ளது.
இதற்கான அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநாட்டில் பங்கேற்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருவார் எனவும் பின்னர் அங்கிருந்து நெல்லைக்கு வருகை தரும் அவர், மாலை 6 மணி அளவில் மாநாட்டு திடலுக்கு வருகை தர உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பின்னர் இரவு 8 மணிக்கு மாநாட்டு மேடையில் உரையாற்றும் அமித்ஷா தமிழகத்தின் அரசியல் நகர்வுகள் உள்ளிட்டவை குறித்து பேசுவார் என தகவல் வெளியாகி உள்ளது.