திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பிறப்பையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருவதால் அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக தரிசனத்திற்கு 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.