மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடைகொண்ட சுறா மீன், சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாள்தோறும் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
அவ்வாறு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்களின் வலையில் 300 கிலோ எடை கொண்ட ராட்சத சுறா மீன் சிக்கியது. சுமார் 3 அடி அகலமும், 12 அடி நீளமும் கொண்ட இந்த மீன், ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.