சென்னை அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிக்கப்படுவதாக முதிய தம்பதிர் புகாரளித்தனர்.
அம்பத்தூரை சேர்ந்த மனோன்மணியம் என்பவர் பொத்தூர் பகுதியில் நிலம் வாங்கி அதில் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் என்பவர் அத்துமீறி நுழைந்து நிலம் தனக்கு சொந்தம் என கூறி ரகளை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து புகாரளித்தும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என தெரிவித்த முதிய தம்பதி நீதி கேட்டு ஆவடி காவல் ஆணையரிடம் புகாரளித்தனர்.