பொள்ளாச்சி அருகே உள்ள நந்த கோபால்சாமி மலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.
அங்கலக்குறிச்சி என்ற கிராமத்தில் உள்ள இந்த மலையில் பாமா ருக்மணி சமேத நந்த கோபால் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் கிருஷ்ண ஜெயந்திவிழா இந்த ஆண்டும் கோலாகலமாக நடத்தப்பட்டது.
அப்போது குழந்தைகள் ராதை கிருஷ்ணர் போல வேடமணிந்து உறியடிக்கும் நிகழ்வில் பங்கேற்றனர். பின்னர் சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்