தனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது இளம் நடிகர்களுக்கு வழிவிட்டு நீங்கள் எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள்? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த ஷாருக்கான், உங்கள் கேள்வியில் இருக்கும் குழந்தைத்தனத்தை மாற்றி கொஞ்சம் முதிர்ச்சியான கேள்வி கேட்க முடிந்தால் கேளுங்கள் எனவும், அதுவரை நீங்கள் ஓய்வு பெறுவதுதான் நல்லது எனவும் கூறினார். இதனால் தான் ஓய்வு பெறப்போவதில்லை என்பதை ஷாருக்கான் ரசிகர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.