உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் ஒரே தோட்டாவில் இரண்டு ரஷ்ய வீரர்களைக் கொன்ற சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், டொனெட்ஸ் பிராந்திய எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் வீரர், 4 கிமீ தொலைவில் கட்டடம் ஒன்றில் நின்றிருந்த இரண்டு ரஷ்ய வீரர்களை ஒரே தோட்டாவில் சுட்டு வீழ்த்தியுள்ளார்.
இந்த சம்பவம் உலக சாதனையாகப் பார்க்கப்படும் நிலையில், உக்ரைன் வீரர் அலிகேட்டர் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதில் இருந்து வெளியேறும் குண்டுகள் வினாடிக்கு ஆயிரம் மீட்டர் வரை செல்லக்கூடிய திறன் பெற்றது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.