தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கிருஷ்ணாஷ்டமி தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் அருகே உள்ள ராமந்தபூர் பகுதியில் கிருஷ்ணாஷ்டமி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இறுதி நாள் விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் கிருஷ்ணரை வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அப்போது, வீதியில் உள்ள மின்சாரக் கம்பிகள் மீது தேர் உரசியதால் மின்சாரம் தாக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த 4 பேர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.