கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரஜினி நடித்துள்ள கூலி படம் பார்ப்பதற்காகக் குழந்தைகளுடன் திரையரங்கிற்குச் சென்ற நபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14-ம் தேதி வெளியான கூலி திரைப்படம் ‘ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், முதல் நாளில் உலகளவில் 151 கோடி ரூபாய் வசூலைக் குவித்து விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் வசூலை முந்தியது.
இந்நிலையில் கோவையில் உள்ள கே.ஜி திரையரங்கிற்குப் படம் பார்ப்பதற்காகச் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்த பெற்றோரைத் திரையரங்கு நிர்வாகம் தடுத்து நிறுத்தியது.
கூலி திரைப்படம் ஏ- சான்றிதழ் பெற்றுள்ள படம் என்பதால் குழந்தைகளுக்கும், சிறார்களுக்கும் அனுமதி இல்லை எனத் திரையரங்க ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிறு சிறு திரையரங்குகளில் அனுமதி கிடைக்கிறது எனவும், டிக்கெட் தொகையைத் திரும்பத்தரக் கோரியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குச் சலசலப்பு ஏற்பட்டது.