நடிகர் அஜித்குமாரின் 64வது திரைப்படம் வித்தியாசமானதாக இருக்கும் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித்குமார் கூட்டணியில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த 64-வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய ஆதிக், ஏகே64 அனைவருக்குமான படமாகவும், அதே நேரம் வித்தியாசமாகவும் இருக்கும் எனக் கூறியுள்ளார்.
மேலும், நடிகர் அஜித்தை புதிய கோணத்தில் காண்பிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அது அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார்.