கேரளா மாநிலம் கொடுங்கலூரில் உள்ள நெடியதள்ளி சிவன் கோயில் திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட ரோபோ யானையிடம் பக்தர்கள் ஆசி பெற்றனர்.
கேரளாவில் உள்ள கோயில்களில் சடங்குகள் மற்றும் ஊர்வலங்களில் உண்மையான யானைகளுக்குப் பதிலாக ரோபோ யானைகளைப் பயன்படுத்தும் முறை அதிகரித்து வருகிறது. விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் விதமாக இந்த ரோபோ யானைகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவின் நெடியதள்ளி சிவன் கோயில் திருவிழாவில் ரோபோ யானை முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது. உண்மையான யானைகளைப் போலவே தோற்றமளிக்கும் இந்த ரோபோ யானை, காதுகள் மற்றும் வாலை அசைக்கக்கூடியவை வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த ரோபோ யானை முன்பு தலைவணங்கி ஆசீர்வாதம் பெற்றும், செல்ஃபி எடுத்தும் மகிழ்கின்றனர்.