கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகக் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 2வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகக் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகக் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
இருப்பினும், குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 2வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை முடிந்து விட்டதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.