இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!
Sep 13, 2026, 02:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

Murugesan M by Murugesan M
Aug 18, 2025, 01:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உலகில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் மட்டும்தான் ஹைட்ரஜன் ரயில்கள் உள்ள நிலையில், இந்த வரிசையில் 5வது நாடாக இந்தியாவும் இணைய உள்ளது.

நீல நிறத்தில் முழு நீள ஹைட்ரஜன் ரயில் பற்றிய வீடியோவை எக்ஸ் தள பக்கத்தில் இணைத்துள்ளார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். ஹைட்ரஜன் ரயிலில் உள்ள அம்சங்களை படம்பிடித்துக் காட்டும் அந்த வீடியோ Coming soon என்று முடிகிறது.

இதன் மூலம், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வரப்போகிறது என்றும் ஹிண்ட்  கொடுத்திருக்கிறார் அவர். கடந்த 2023-ம் ஆண்டு மாநிலங்​களவை​யில் பேசிய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், “பாரம்​பரிய நகரங்​களுக்கு ஹைட்ரஜன்” என்ற திட்​டத்​தின்கீழ் 35 ஹைட்ரஜன் ரயில்​களை இயக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தெரிவித்திருந்தார்.

அவரது அறிவிப்பு செயலாக்கம் பெற்ற நிலையில், அண்மையில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாகப் பரிசோதித்தது சென்னை ஐசிஎப் தொழிற்சாலை.

136 கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரஜன் ரயில் திட்டம், ஜீரோ கார்​பன் உமிழ்வு நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இலக்குகளை இந்தியா விரைவில் எட்ட உதவும்.
தற்போது பரிசோதனை நிலையில் உள்ள ஹைட்ரஜன் ரயில், ஹரியானா மாநிலம் ஜிந்த் – சோனிபட் இடையே இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 2600 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். இரண்டு வழித் தடங்களில் நாள்தோறும் 356 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக ஜிந்த் நகரில் 3000 கிலோ ஹைட்ரஜனை சேமிக்கும் வகையிலான ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் அமைக்கப்பட்டது. இங்குள்ள ஹைட்ரஜன் கம்ப்ரஸர் மற்றும் டிஸ்பென்சர்கள் மூலம் ரயிலில் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் மட்டும்தான் ஹைட்ரஜன் ரயில்கள் உள்ள நிலையில்,  இந்த வரிசையில் 5வது நாடாக இந்தியாவும் இணைய உள்ளது.

மேற்கண்ட நாடுகள் 500 முதல் 600 குதிரைத்திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்கியிருந்தாலும், இந்தியா ஆயிரத்து 200 குதிரைத்திறன் கொண்ட இன்ஜினை உருவாக்கியிருப்பது, ரயில்வே உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: New milestone for Indian Railways: Hydrogen train ready to flyஇந்திய ரயில்வேயின் புதிய மைல்கல்
Share
Tweet
SendShare
Previous Post

குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை!

Next Post

மண்வெட்டியால் மகனை அடித்து கொலை செய்த தாய்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies