சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை அவரது தாயே மண்வெட்டியால் அடித்துக்கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காவடிகாரனூர் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் – காளியம்மாள் என்ற முதிய தம்பதியருக்கு முத்துசாமி என்ற மகன் உள்ளார். இவரின் மனைவி பிரிந்து சென்றதால் பெற்றோருடன் வசித்து வரும் முத்துச்சாமி, மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.
வழக்கம் போல மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த முத்துச்சாமி பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த காளியம்மாள், முத்துச்சாமியின் தலையில் மண்வெட்டியைக் கொண்டு தாக்கி கொலை செய்தார்.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காளியம்மாளைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.