கூலி திரைப்படத்தில் நடித்ததற்காகச் சம்பளம் எதுவும் வாங்கவில்லை எனப் பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் – ரஜினி கூட்டணியில் வெளியான கூலி திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இதற்காக அவர் 20 கோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆமிர்கான், கூலி படத்தில் நடிக்கச் சம்பளம் வாங்கிய தகவல் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் மேல், பெரிய அன்பும். மரியாதையும் வைத்திருக்கிறேன் எனவும், அவருடன் நடித்ததே பரிசுதான் எனவும் கூறியுள்ளார்.