மகாராஷ்டிராவின் நாந்தேட் பகுதியில் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் ஜீப் மிதந்தபடி சென்றது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி, பல்வேறு குடியிருப்பு பகுதியிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாந்தேட் பகுதியில் பெய்த கனமழையால் ஹிமாயத்நகர்-ஜல்கான் சாலையில் உள்ள சுரங்கப்பாதை தணீணீரில் மூழ்கியது.
அப்போது அவ்வழியாக வந்த ஜீப் ஒன்று தண்ணீரில் சிக்கி மிதந்தபடி சென்றது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வாகனத்தில் சிக்கியிருந்த ஓட்டுநரைப் பாதுகாப்பாக மீட்டனர்.