பெருசு திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் பெருசு திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் வைபவ் நாயகனாகவும், சுனில், பாலகிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மரணப்படுக்கையில் இருக்கும் குடும்பப் பெரியவரின் இறப்பில் நேரும் ஒரு துயர சம்பவம் பற்றிய துயர நகைச்சுவை கதையாக பெருசு படம் உருவாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ஹன்சல் மேத்தா இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.