திருச்சியில் இரவு பணி காவலர் உறங்கியதாக வீடியோ வெளியான சம்பவத்தில் வீடியோ எடுத்த காவல் உதவி ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
காவலர் ரமேஷ் என்பவர் உறங்கியதாக வீடியோ எடுத்த காவல் உதவி ஆணையர் ஜான் கென்னடி தனக்குக் கீழ்பணிபுரியும் காவலர்களை மிரட்டி வேலை வாங்குவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மதுரையில் பணிபுரிந்த போதும் இதே தவற்றைச் செய்ததால் தான் ஜான் கென்னடி திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் தற்போதும் அதே தவற்றைச் செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை உரிய விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.