இந்தோனேசியாவில் 17 வயதுக்குப்பட்டோருக்கான கால்பந்து போட்டியின்போது கோல் அடித்ததைக் கொண்டாட ரசிகர்களை நோக்கி ஓடிய மியர்சா என்ற வீரர் 10 அடி பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வடக்கு சுமத்ரா மைதானத்தில் இந்தோனேசியா – தஜிகிஸ்தான் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் போட்டியின் 34வது நிமிடத்தில் இந்தோனேசிய அணியின் மியர்சா என்ற வீரர் ஹெட் போர்டு மூலம் கோல் அடித்தார்.
அப்போது தனது ஸ்ட்ரைக்கைப் பார்த்துப் பரவசமடைந்த ஃபிர்ஜதுல்லா மியர்சா, உணர்ச்சியின் மிகுதியில் ரசிகர்களின் கூட்டத்தை நோக்கி ஓடி, விளம்பரப் பலகைகளைத் தாண்டி குதித்தார்.
அப்போது அங்கிருந்த 10 அடி பள்ளத்தில் கீழே விழுந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் சிறு காயங்களின்றி, மீண்டும் மைதானத்திற்குள் வந்து அவர் விளையாடினார்.