சிக்கந்தர் படத் தோல்விக்குத் தான் பொறுப்பல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ், பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கினார்.
இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், தான் நினைத்த கதையைத் திரையில் கொண்டு வரமுடியவில்லை எனவும், அதற்குத் தான் மட்டும் பொறுப்பாக முடியாது, படக்குழுவும் ஒரு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.