இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது.
அப்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் மூவர்ணக் கொடியை ஏந்தி ஆடிப்பாடி ஊர்வலமாகச் சென்று மகிழ்ந்தனர்.
இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் கலந்து கொண்டு திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாகச் சென்றனர். இந்த பேரணியானது, வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.