ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் போகபுரம் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் மழைநீர், அருகில் உள்ள வீடுகளில் வெள்ளமாய் புகுந்து கொள்வதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
மண் சாலைகளாக இருக்கும் அப்பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ள நிலையில், வீடுகளுக்குள் தண்ணீருடன் செம்மண்ணும் கலந்து வருவதால் சுத்தம் செய்வதும் மிகவும் போராட்டமாய் உள்ளது என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பல நேரங்களில் வாகனங்களும் வெள்ளத்தில் சிக்கிக் கொள்வதால் வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.