பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கனமழையால் நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ள மீட்புப் பணி மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக் கிழமையன்று பாகிஸ்தானின் வடக்கு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மலைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மண் மற்றும் பாறைகள் சரிந்து, வீடுகள், வாகனங்கள் மற்றும் உடமைகள் அடித்துச் செல்லப்பட்டன.
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணி நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.