அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலியை சேர்ந்த ஜாஸ்மின் பயோலினி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குடெர்மெட்டோவா உடன் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய பயோலினி, இரண்டாவது செட் டை-பிரேக்கர் ஆன போதிலும் அதையும் கைப்பற்றினார்.
இதன்மூலம் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு பயோலினி முன்னேறியுள்ளார்.