கடலூர் அருகே மீனவ கிராம ஊர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சோனாங்குப்பம் மீனவ கிராமத்திற்கான தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் போலீசார் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.