ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்- ரஷ்ய அதிபர் புதின் இடையே கடந்த வாரம் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில், பிரதமர் மோடியை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்புகொண்ட ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் உடனான சந்திப்பு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட அதிபர் புதினுக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.