சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஆய்வு மேற்கொண்ட விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி ப்ளோரிடாவில் இருந்து புறப்பட்ட அவர், 18 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு நடத்தினார். இதன் மூலமாக, 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு பயணித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்த நிலையில், சுபான்ஷு சுக்லாவை, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்த பிரதமர் மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்.