பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது என, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினரின் வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி பயணம் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ஜிதேந்திர சிங், எதிர்கட்சிகள் தற்போது எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாத மனநிலையில் இருப்பதை, அவர்களின் நடத்தை மூலமாக அறிந்துகொள்ள முடிவதாக தெரிவித்தார்.
எல்லா விதத்திலும் தோல்வியை தழுவி வருவதால் எதிர்க்கட்சியினர் விரக்தியில் இருப்பதாக விமர்சித்த ஜிதேந்திர சிங், நாட்டை பற்றி அக்கறை கொள்ளாவிட்டாலும், வளர்ந்து வரும் அறிவியல் சமூகத்தை பற்றியாவது எதிர்க்கட்சிகள் நினைக்க வேண்டுமென தெரிவித்தார்.