மத்திய அரசு திட்டமிட்டுள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து ஆறு பேர் அடங்கிய மாநில அமைச்சர்கள் குழுவிடம் நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைக்க உள்ளார்.
நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி அடுக்குகள் குறைக்கப்பட உள்ளதாக சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, 12 மற்றும் 28 சதவீத ஜிஎஸ்டி அடுக்குகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு 5 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி அடுக்குகளின் கீழ் கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தவிர, மிக ஆடம்பர மற்றும் புகையிலை பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாளையும், நாளை மறுநாளும் டெல்லியில் நடைபெறவுள்ள அமைச்சர்கள் குழு கூட்டத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாகவும், இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசின் முடிவு குறித்து விரிவாக எடுத்துரைப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், காப்பீடு துறைக்கான ஜிஎஸ்டி தற்போதுள்ள 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் அல்லது பூஜ்ஜியமாக குறைக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.