ஓசூர் அருகே பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மதுரையில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பேருந்து ஒன்று கருக்கம்பட்டி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
சாலை ஓர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பின்னர் அனைவரும் மீட்கப்பட்டு வெவ்வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.