கர்நாடக மாநிலம் பெங்களூரில் தெருநாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி 4 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
தாவணகெரே நகரில் உள்ள சாஸ்திரி லேஅவுட்டில் வசிக்கும் முகமது ஷாகிர் அலி என்பவரின் 4 வயதான மகள் கதிரா பானுவைத் தெருநாய் கடித்தது.
இதனால் சிறுமி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு 4 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.